விளையாட்டு

சிங்கத்துடன் செல்பி: ஜடேஜாவுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

குஜராத் மாநில சரணாலயத்தில் சிங்கங்களுடன் செல்பி எடுத்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

கிர் சரணால யத்துக்கு கடந்த ஜூன் 14-ம் தேதி தனது குடும்பத்தின ருடன் சுற்றுலா சென்ற ரவீந்திர ஜடேஜா சிங்கங்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஜுனாகத் பகுதி வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ஜடேஜாவுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் ஜடேஜா சார்பாக அவரது மாமனார் ஹர்தேவ் சிங் சோலங்கி அபராதத் தொகையை ஜுனாகத் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் செலுத்தியுள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் போட்டியில் ஷிவானி, சாஜன் ஏமாற்றம்

மகளிருக்கான நீச்சல் 200 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் இந்தியா சார்பில் ஷிவானி கட்டாரியா களமிறங்கினார். தகுதிச்சுற்று 1-ல் பந்தய தூரத்தை 2:04 நிமிடம், 34 விநாடியில் கடந்து 2-வது இடம் பிடித்தார். இருப்பினும் ஒட்டுமொத்த தகுதிச்சுற்று முடிவில் 41-வது இடம் பெற்ற ஷிவானி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்பிளை தகுதிச்சுற்று 1-ல் இந்திய வீரர் சாஜன் பிரகாஷ் பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை 1:59 நிமிடம் 37 விநாடியில் கடந்து 4-வது இடம் பிடித்தார். ஒட்டுமொத்த தகுதிச்சுற்று முடிவில் 28-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சாஜன் பிரகாஷ் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

200 மீட்டரில் 19 விநாடிகளே இலக்கு

உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் ரியோ டி ஜெனிரோ நகரில் கூறும்போது, “இது எனது கடைசி ஒலிம்பிக் தொடர் என்பது உறுதி. 200 மீட்டர் ஓட்டத்தில் 19 விநாடிகளுக்குள் பந்தய தூரத்தை எட்டுவதே எனது இலக்கு. 100 மீட்டர் ஓட்டம் எனக்கு பிரச்சினையல்ல. ஆனால் 200 மீட்டர் எனக்கு பதற்றமளிக்கிறது. எனவே இம்முறை பதற்றத்தை வென்று 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்ட அனைத்தையும் செய்து வருகிறேன்” என்றார்.

படகு பந்தயத்தில் தத்து போகனால் ஏமாற்றம்

ஆடவருக்கான தனிநபர் படகு பந்தயத்தின் ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியாவின் தத்து போகனால் காலிறுதி சுற்றில் பங்கேற்றார். இதில் பந்தய தூரத்தை தத்து போகனால் 6:59.89 விநாடிகளில் கடந்து 15-வது இடத்தை பிடித்தார். இதில் 12 இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமே அரையிறுதி போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால் தத்து போகனால் வெளியேறினார்.

SCROLL FOR NEXT