ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்க ளுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்த யத்தில் தென் ஆப்பிரிக்க வீராங் கனை செமன்யா தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெண் களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்த யம் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்க வீங்கனையான காஸ்டர் செமன்யா தங்கப் பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 55.28 விநாடிகளில் கடந்தார். ஒலிம்பிக் போட்டியில் செமன்யா பெறும் முதலாவது தங்கப் பதக்கமாகும் இது.
இப்போட்டியில் 1:56.49 நிமிடங் களில் பந்தய தூரத்தைக் கடந்த புரூண்டி நாட்டு வீராங்கனை பிரான்சின் நியோன்சபா வெள்ளிப் பதக்கத்தையும், கென்ய வீராங் கனை மார்கரெட் வாம்புயி வெண் கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து வீரருக்கு தங்கம்
ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட் டர் ஓட்டப்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் மோ ஃபாரா தங்கப் பதக் கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 3.30 விநாடிகளில் கடந்தார். இந்த ஒலிம்பிக்கில் மோ ஃபாரா பெறும் 2-வது தங்கப்பதக்கமாகும் இது. ஏற்கெனவே கடந்த வாரம் நடந்த 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
ஆண்களுக்கான பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் மாட் சென்ட்ரோவிட்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 3 நிமிடங்கள் 50 விநாடிகளில் கடந்தார். இப்போட்டியில் நடப்பு சாம்பியனான அல்ஜீரியாவின் டவுபிக் மக்லோஃபி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.