விளையாட்டு

ஷாங்காய் சேலஞ்சர் இறுதிச்சுற்றில் சோம்தேவ்

செய்திப்பிரிவு

ஷாங்காய் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் சோம்தேவ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் ஒற்றையர் அரையிறுதியில் சோம்தேவ் 1-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லூகா வெனியை தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மிக மோசமாக இழந்த சோம்தேவ், பின்னர் நடைபெற்ற இரு செட்களிலும் வெனியின் சர்வீஸ்களை தகர்த்து வெற்றி கண்டார். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் ஜப்பானின் யோஷிட்டோ நிஷியோக்காவை சந்திக்கிறார்.

இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சனம் சிங்குடன் இணைந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சோம்தேவ். இந்த ஜோடி இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் சகநாட்டவர்களான யூகி பாம்ப்ரி-திவிஜ் சரண் ஜோடியை சந்திக்கிறது.

பாம்ப்ரி-திவிஜ் ஜோடி 7-6 (2), 7-6 (2) என்ற நேர் செட்களில் சீன தைபேவின் டி சென்-ஷியென் இயின் பெங் ஜோடியை தோற்கடித்தது.

SCROLL FOR NEXT