விளையாட்டு

நடிகர் விஜய் சினிமா டயலாக்கை குறிப்பிட்டு இலங்கை வெற்றியை பதிவு செய்த அர்னால்ட்

செய்திப்பிரிவு

விஜய் சினிமா வசனத்தை குறிப்பிட்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியை பதிவிட்டிருக்கிறார் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்ட்.

மலிங்காவின் சிறப்பான பந்துவீச்சு, டிசில்வாவின் திருப்புமுனை விக்கெட், மேத்யூஸின் அரைசதம் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில்  இங்கிலாந்து அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இலங்கை.

இந்த வெற்றி குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரஸல் அர்னால்ட் “ டேய் மார்கன், எப்போ வந்தோம் ங்கறது முக்கியம் இல்ல டா, புல்லட் எப்டி எறங்குது ங்கறது தான் முக்கியம்” என்று விஜய் நடித்த சினிமா டைலாக்கை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

மேலும் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளதுடன் பிகில் படத்தை தீபாவளிக்கு காண ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT