ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதற்காக டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகியிருக்கிறேன். அதிக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பதுதான் எனது உச்சபட்ச இலக்கு” என தெரிவித்துள்ளார். ஆஸ்தி ரேலிய டி20 அணியின் புதிய கேப்டனாக ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.