விளையாட்டு

நான் உள்ளுக்குள் எப்படி உணர்கிறேன் என்பது உனக்குத் தெரியும்: ரோஹித் நெகிழ்ச்சி பதிவுக்கு யுவராஜ் உணர்ச்சிகரம்

செய்திப்பிரிவு

யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் மலை போல் குவிந்து வருகின்றன. அவருக்கு ஒரு பிரியாவிடை போட்டி அளித்து ரசிகர்கள் முன்னிலையில் கடைசி போட்டியை ஆடி கவுரவமாக அனுப்ப படவேண்டிய தகுதி உடையவர் என்ற கருத்து ரசிகர்களிடையே பரவலாகி வரும் நிலையில் ரோஹித் சர்மாவும் அதே மனநிலையைப் பிரதிபலித்துள்ளார்.

ரோஹித் சர்மா தன் ட்விட்டர் பக்கத்தில், “எதுவும் கடந்து போகும்வரை உன்னிடம் என்ன உள்ளது என்பது உனக்குத் தெரியாது, உன்னை நேசிக்கிறேன் சகோதரா.. நல்ல பிரியாவிடைக்கு தகுதியானவர்தான் நீங்கள்” என்று ட்வீட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றியுடன் பதிலளித்த யுவராஜ் சிங், “நான் உள்ளுக்குள் எப்படி உணர்கிறேன் என்பது உனக்குத் தெரியும். நேசிக்கிறேன் சகோதரா, நீ ஒரு லெஜண்ட் ஆகப்போகிறாய்” என்று உணர்ச்சிகரமாக ட்வீட் செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் நிச்சயம் இன்னும் சிறந்த பிரியாவிடைக்கு யுவராஜ் தகுதியானவரே என்று பிசிசிஐக்கு அறிவுறுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இது தொடர்பான #YuviDeservesProperFarewell #YuvrajSingh என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT