ஐபிஎல் கிரிக்கெட் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது.இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் போட்டியின் முதல் பாதி ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது www.iplt20.com, www.ticketmaster.ae ஆகிய இணையதளங்களில் டிக்கெட்டை பெற முடியும்.
ஏப்ரல் 16-ம் தேதி அபுதாபியில் 7-வது ஐபிஎல் போட்டி தொடங்குகிறது.அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஏப்ரல் 10ம் தேதி முதல் மைதானத்தில் உள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட்டுகளை பெற முடியும்.முதல் 20-வது போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளன.