சவுத்தாம்டனில் நடைபெறும் இன்றைய உலகக்கோப்பை தொடரின் 31வது ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கான் கேப்டன் குல்பதீன் நயீப் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்தார்.
ரூபல் ஹுசைன், சபீர் ரஹ்மானுக்குப் பதில் வங்கதேச அணியில் மொசாடக் ஹுசைன் மற்றும் சைபுதின் விளையாடுகின்றனர். கடந்த போட்டியில் வங்கதேச அணியின் சபீர் ரஹ்மான், வார்னருக்கு எளிதான கேட்சை விட்டதோடு பேட்டிங்கிலும் டக் அவுட் ஆனதால் நீக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணியில் அதிரடி தொடக்க வீரர் ஹஸ்ரத்துல்லா சஸாய் மற்று அப்தாப் ஆலம் அணியிலிருந்து நீக்கப்பட்டு தவ்லத் ஸத்ரான் மீண்டும் அழைக்கப்பட சமியுல்லா ஷின்வாரி இந்த உலகக்கோப்பையில் தன் முதல் போட்டியில் களம் காண்கிறார்.
மழை அச்சுறுத்தல் இருப்பதால் டக்வொர்த் லூயிஸ் முறை அமலாகலாம் என்ற எண்ணத்தில் ஆப்கான் கேப்டன் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தாரா அல்லது அன்று இந்திய அணிக்கு எதிராக பிரமாதமாக வீசி கட்டுப்படுத்தி பிறகு விரட்டலில் இந்திய அணியை தண்ணி குடிக்க வைத்ததனாலா என்று தெரியவில்லை.
பங்களாதேஷ் 5 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது, இதில் வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்துடன் புள்ளிகள் அளவில் சமன் பெறும்.