விளையாட்டு

‘எல்லா புகழும் ஐபிஎலுக்கே’ - இந்திய அணிக்கு அப்ரிடி பாராட்டு

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வென்றதற்கான அனைத்து புகழும் ஐபிஎலுக்கே செல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள்  வீரர் ஷாகித் அப்ரிடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் அபார சதம், கோலி, ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ், குல்தீப், பாண்டியாவின் திருப்புமுனை விக்கெட் ஆகியவற்றால், இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடந்த  உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்ற சாதனை வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது.

இந்த நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து ஷாகித் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், “ தகுதியான வெற்றியை பெற்ற பிசிசிஐக்கு வாழ்த்துகள். கிரிக்கெட் விளையாடும் திறன் வழக்கத்துக்கு மாறாக உயர்த்துள்ளது.

இதற்கான அனைத்து புகழும்  ஐபிஎல் அமைப்புக்கே செல்லும். ஐபிஎல் இளம் வீரர்களை கண்டறியவதற்கு மட்டும் உதவவில்லை.

நெருக்கடியான நேரத்தில் இளம் வீரர்கள் அழுத்தத்ததை கையாளும் விதத்தையும் கற்று கொடுத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT