2011 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடர் நாயகன் யுவராஜ் சிங் அவரது ரசிகர்களின் வேதனையை அதிகரித்து சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அளித்தார்.
ஓய்வு அறிவித்த அன்றே அயல்நாட்டு டி20 லீகுகளில் ஆடும் தன் விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். அதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெறப்போவதாக தெரிவித்திருந்தார்.
யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்து விட்டதால் பிசிசிஐயின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் இவருக்குப் பொருந்தாது, எனவே இவர் கனடா குளோபல் டி20 தொடரில் ஆடுகிறார்.
கனடா குளோபல் டி20 தொடரின் 2ம் அத்தியாயம் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பிராம்ப்டனில் நடைபெறும். இதில் வான்குவர் நைட்ஸ், வின்னிபெக் ஹாக்ஸ், எட்மண்டன் ராயல்ஸ், மாண்ட்ரீல் டைகர்ஸ், டொராண்டோ நேஷனல்ஸ் ஆகிய அணிகள் ஆடுகின்றன. கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் பி அணி இருந்தது, இம்முறை அதற்குப் பதிலாக பிராம்ப்டன் உல்வ்ஸ் அணி ஆடுகிறது.
இந்த குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல் அணிக்கு யுவராஜ் சிங் ஆடுகிறார். இந்த 2019 சீசனில் இதில் ஆடும் மற்ற பெரிய தலைகள் கேன் வில்லியம்சன், பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் லின், ஷோயப் மாலிக், டுபிளெசிஸ், ஷாகிப் அல் ஹசன், கொலின் மன்ரோ ஆகியோராவர்.
கடந்த சீசனிலிருந்து இந்த சீசனுக்கும் தக்கவைக்கப்பட்டவர்களில் கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, ஆந்த்ரே ரஸல், கிரன் போலார்ட், திசர பெரேரா, சுனில் நரைன் ஆகியோர் அடங்குவர்.