லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 5வது போட்டியில் டாஸ் வென்ற தெ.ஆ.கேப்டன் டுபிளெசிஸ் முதலில் வங்கதேசத்தை பேட் செய்ய அழைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணியில் டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் வந்துள்ளனர். வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் திரும்பியுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை கூடுதலாக இறக்கியுள்ளதால் பிட்ச் தொடக்கத்தில் வேகப்பந்துக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெ ஆப்பிரிக்க அணி விவரம்:
டுபிளெசிஸ், டிகாக், மார்க்ரம், வான் டெர் டூசன், டேவிட் மில்லர், டுமினி, பெலுக்வயோ, மோரிஸ், ரபாடா, இங்கிடி, இம்ரான் தாஹிர்.
வங்கதேச அணி:
தமிம், சவுமியா சர்க்கார், ஷாகிப், முஷ்பிகுர், மிதுன், மஹமுதுல்லா, மொசாடெக், சைபுதின், மெஹதி ஹசன், மொர்டசா, முஸ்தபிசுர் ரஹ்மான்