விளையாட்டு

கோலியை சமன் செய்த டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவை நெருங்கினார்: ஆஸ்திரேலியா 381 ரன்கள் குவிப்பு

செய்திப்பிரிவு

நாட்டிங்கமில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டியில் வார்னரின் மிகப்பெரிய அதிரடி சதத்தினால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 381 ரன்கள் விளாசியுள்ளது.

டேவிட் வார்னர் தனது 16வது ஒருநாள் சதத்தை எட்டினார். பிறகு வங்கதேசப் பந்து வீச்சை வெ72 பளுத்துக் கட்டி 147 பந்துகளில் 14 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 166 ரன்களை குவித்தார். ஒரு கட்டத்தில் 31 ஆவது ஓவர் முதல் 40வது ஓவர் வரை ஆஸ்திரேலியா 82 ரன்களைக் குவித்தது. பிறகு 45. 3 ஓவர்கள் வாக்கில் கிளென் மேக்ஸ்வெல் (10 பந்துகளில் 32 ரன்கள் வெளுத்து வாங்கிய தருணத்தில் 40 பந்துகளில் 102 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா.

முதல் விக்கெட்டுக்காக ஏரோன் பிஞ்ச் (53) வார்னர் இணைந்து 121 ரன்களை 20 ஓவர்களில் சேர்க்க பிஞ்ச், சவுமியா சர்க்கார் பந்தில் வெளியேறினார்.

பிறகு உஸ்மான் கவாஜாவும் வார்னரும் இணைந்தனர். இருவரும் சேர்ந்து 192 ரன்களை சேர்த்தனர். இரண்டு சதக்கூட்டணி ஒரு உலகக்கோப்பை சாதனையாகும், கவாஜா 72 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 89 ரன்களில் சவுமியா சர்க்காரிடம் வெளியேறினார். மேக்ஸ்வெல் இறங்கி சவுமியா சர்க்கார் பந்துகளை சிக்சர்களாக விளாசி 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 32 ரன்கள் விளாசினார். ஆனால் பைன் லெக்கில் ஒரு பந்தைத் தட்டி விட்டு ஒரு ரன்னுக்காக ஓட,  ஓடுவது போல் பாச்சா காட்டிய கவாஜா பிறகு நின்று விட்டார், திரும்ப ரீச் செய்ய மேக்ஸ்வெல் முயலவில்லை, ஆனால் கவாஜா மிது கடும் காண்டானார். ஆஸ்திரேலியா 381 ரன்களைக் குவித்தது, மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால் 400 ரன்கள் தாண்டியிருக்கும்.

இதில் வாரனர் சில சாதனைகளைப் புரிந்துள்ளார்:

உலகக்கோப்பையில் வார்னர் எடுக்கும் 2வது 150+ ஸ்கோராகும் இது. எந்த வீரரும் ஒரு 150+ ஸ்கோருக்கு மேல் இதுவரை உலகக்கோப்பையில் எடுத்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் வார்னர் 6வது முறையாக 150+ ஸ்கோரை எட்டினார். இந்த விதத்தில் ரோஹித் சர்மா 7 முறை 150+ ஸ்கோருடன் முதலிடம் வகிக்கிறார், அநேகமாக இந்த உலகக்கோப்பையில் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

அதே போல் தனது 16வது ஒருநாள் சதத்தை தன் 110வது இன்னிங்சில் எடுத்தார் வார்னர். ஹஷிம் ஆம்லா மட்டுமே 94 இன்னிங்ஸ்களில் 16 சதம் எடுத்தார். இந்நிலையில் விராட் கோலியுடன் 110 இன்னிங்சில் 16 சதங்கள் எடுத்து சமன் செய்துள்ளார். மார்க் வாஹ், ரிக்கி பாண்டிங் ஆகியோர்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் 16 சதங்களுக்கு மேல் ஆஸ்திரேலிய அணியில் அடித்தவர்கள்.

கடைசி 15 ஒவர்களில் ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் 173 ரன்கள் குவித்தது, இது இந்த தொடரில் 2வது அதிகபட்சமாகும். இங்கிலாந்து அணி அன்று மோர்கன் அதிரடியில் ஆப்கானுக்கு எதிராக கடைசி 15 ஓவர்களில் 198 ரன்கள் விளாசியது.

ஒரே ஓவரில் 25 ரன்கள் விளாசப்பட்டது, இந்த உலகக்கோப்பையில் ஒரு ஓவரின் அதிகபட்ச ரன்களாகும். இது நடந்தது 46வது ஒவரில். இதற்கு முன்னர் மே.இ.தீவுகளுகு எதிராக வங்கதேசம் 38வது ஓவரில் 24 ரன்கள் எடுத்ததே அதிகமாக இருந்தது.

உலகக்கோப்பையில் 2வது அதிகபட்ச ஸ்கோரான 381 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. வங்கதேசத்துக்கு எதிராக ஒட்டுமொத்தமாக 4வது பெரிய ஸ்கோராகும்.  4 பெரிய ஸ்கோர்களில் 2 நாட்டிங்கம் மைதானத்தில் வந்துள்ளது.

SCROLL FOR NEXT