நாட்டிங்காமில் தொடங்கிய ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2019-ன் 26-வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி --- ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.
ஏரோன் பிஞ்ச் -- ரன்களுடனும் வார்னர் -- ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம்பெற்றுள்ளார், இவருடன் ஆடம் ஸாம்ப்பா, கூல்ட்டர் நைல் ஆகியோர் ஆடுகின்றனர், மார்ஷ், பெஹெண்டார்ப், ரிச்சர்ட்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அணியில் கடந்த போட்டியில் கெய்லை டக் அவுட் செய்த மொகமது சைபுதின் காயத்தினால் இந்தப் போட்டியில் ஆடவில்லை. அதே போல் மொசாடெக் ஹுசைனும் ஆடவில்லை, பதிலாக சபீர் ரஹ்மான், ரூபல் ஹுசைன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரன் குவிப்பு பிட்ச் என்று பிட்ச் அறிக்கையில் கூறுவதற்கேற்ப பிஞ்ச், வார்னர் 8 ஓவர் 44/0 என்று தொடங்கியுள்ளனர். ஆட்டத்தின் 5வது ஓவரை மோர்டசா வீச முதல் பந்தை கவர் பவுண்டரிக்கு மேல் பிஞ்ச் சிக்ஸ் அடித்தார்.
அதே ஓவர் கடைசி பந்தில் வார்னர் ஷார்ட் அண்ட் வைடு பந்தை கட் செய்ய அது பேக்வர்ட் பாயிண்டில் கேட்ச் ஆகச் சென்றது, ஆனால் அங்கு சபீர் ரஹ்மான் அதனை தரைதட்டச் செய்தார். வார்னர் அப்போது 10 ரன்களில் இருந்தது குறிப்பிடத்தக்கது.