விளையாட்டு

நார்வேயை வென்றது இத்தாலி

செய்திப்பிரிவு

ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில் நார்வே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது இத்தாலி.

யூரோ கோப்பை என்று அழைக்கப்படும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி பிரான்ஸில் 2016-ம் ஆண்டு ஜூன் 10 முதல் ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இப்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில் மொத்தம் 53 அணிகள் பங்கேற்றுள்ளன.

இதில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அந்நாட்டு அணியை இத்தாலி எதிர்கொண்டு வெற்றி பெற்றது. இத்தாலி தரப்பின் சிமோன் சாசா, லியானார்டோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

SCROLL FOR NEXT