விளையாட்டு

வட்டு எறிதல் பிரிவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை சீமா பூனியா

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 5-வது தங்கப்பதக்கம் வென்றது. வட்டு எறிதலில் சீமா பூனியா தங்கம் வென்றார்.

இறுதிச் சுற்றில் 61.03மீ தூரம் வட்டு எறிந்து முதலிடம் பெற்றதால் தங்கம் வென்றார் சீமா பூனியா.

மகளிர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் 60மீ தூரத்தைக் கடந்த ஒரே வீராங்கனையாக சீமா பூனியா திகழ்ந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை கிருஷ்ணா பூனியா 55.57மீ தூரம் விட்டெறிந்து 4வது இடத்தில் முடிந்தார்.

சீமா பூனியாவின் சாதனை என்னவெனில் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்த்த சீன வீராங்கனைகளை விஞ்சியதே. இரு சீன வீராங்கனைகளும் வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கமே வெல்ல முடிந்தது.

இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இவர் 61.91 மீட்டர்கள் விட்டெறிந்தார். ஆனால் அப்போது 13வது இடத்தையே அவரால் பிடிக்க முடிந்தது.

SCROLL FOR NEXT