இந்தியா-செர்பியா இடை யிலான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி வரும் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை பெங்களூரில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவின் முன்னணி வீரரான லியாண்டர் பயஸ், ரோஹன் போபண் ணாவுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் களமிறங் குகிறார் என இந்திய அணியின் “நான் பிளேயிங்” கேப்டன் ஆனந்த் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என ஆனந்த் தெரிவித்துள்ளார்.