சென்னை கால்பந்து சங்கத்தின் (சி.எப்.ஏ.) புதிய தலைவராக குலாம் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சி.எப்.ஏ.வின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது 2014-18-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
அதில் தலைவராக ஏ.குலாம் உசேனும், துணைத் தலைவர்களாக எஸ்.ஆனந்தராஜ், பி.எஸ்.கண்ணையன், எம்.குமரேஷ், கே.மதுரை ஆகியோரும், செயலாளராக இ.சுகுமாறனும், உதவி செயலாளராக ஏ.ஆனந்தன், வி.எம்.பி.ஹரிபிரசாத், டி.ரமேஷ் பாபு ஆகியோரும், பொருளாளராக ஆர்.ஜெயச்சந்திரனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
செயற்குழு உறுப்பினர்களாக வி.துரை என்ற ஹென்றி, ஜே.எம்.ஃபெர்னாண்டோ, எம்.ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், டி.கலைவாணன், பி.முனுசாமி, பி.ரகுபதி, எஸ்.ராஜன், எஸ்.ராஜசேகர், டி.வடிவேலு, வி.வளவன் சிங்கையா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.