எனது பர்பிள் கேப்பை உண்மையான சிஎஸ்கே ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடத்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிருக்கு பர்பிள் கேப் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பர்பிள் கேப்பை உண்மையான சிஎஸ்கே ரசிகர்களுக்கு அர்பணிப்பதாக இம்ரான் தாஹிர் தனது ட்விட்டில் பதிவிட்டிருக்கிறார்.
இதுகுறித்து இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” எனது பர்பிள் கேப்பை நான் விளையாட ஊக்கமளித்த உண்மையான சிஎஸ்கே ரசிகர்க்ளுக்கு அர்ப்பணிக்கிறேன். நீங்கள்தான் இந்த பர்பிள் கேப்பை வென்று இருக்கிறீர்கள். எனது சகோதர, சகோதரிகளுக்கு நன்றி கூற வார்த்தை போதுமானதாக இல்லை. என் இனிய தமிழ் மக்களே விடை பெறுகிறேன் இங்கிருந்து... உங்கள் உள்ளங்களிலிருந்து இருந்து அல்ல, அன்பு தோழமைக்கு எடுத்துகாட்டாக விளங்கிய என் உடன்பிறப்புகளே நன்றி . வ்ருவோம் அடுத்த வருடம் சூறாவளியாக.” என்றார்.