விளையாட்டு

வட்டு எறிதலில் விகாஸ் கவுடா வெள்ளி வென்றார்

பிடிஐ

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆடவர் வட்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் விகாஸ் கவுடா இறுதிப் போட்டியில் தோல்வி தழுவியதால் வெள்ளி வென்றுள்ளார்.

கடந்த ஆசிய விளையாட்டுச் சாம்பியனான ஈரானைச் சேர்ந்த ஈஷான் ஹதாதி தங்கம் வென்றார்.

விகாஸ் கவுடா தனது 2வது முயற்சியில் 62.58மீ. தூரம் விட்டெறிந்தார். ஈரான் வீரரோ 65.11மீ. தூரம் விட்டெறிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் 3வது முறையாக தொடர்ச்சியாக தங்கம் வென்று ஹாட்ரிக் அடித்துள்ளார் ஹதாதி.

SCROLL FOR NEXT