விளையாட்டு

காலில் காயத்துடன் நொண்டிச் செல்லும் வாட்ஸன்: குணமடைய ரசிகர்கள் வாழ்த்து

செய்திப்பிரிவு

காலில் ரத்தக் காயத்துடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவை வெற்றியின் அருகில் கொண்டு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் குணமடைய ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் தோற்றபோதிலும், அந்த அணி வீரர் ஷேன் வாட்ஸன் செயல் இன்று நெட்டிசன்கள் மத்தியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் புகழப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  இறுதிப்போட்டி முடிந்த பின்னர் ஷேன் வாட்ஸன் காயத்துடன் மெதுவாக நொண்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஐபிஎல் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT