விளையாட்டு

ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்று வரலாறு படைத்தது

செய்திப்பிரிவு

இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஸ்குவாஷ் அணி தங்கம் வென்று வரலாறு படைத்தது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தனிநபர் பிரிவில் சவ்ரவ் கோஷல், தீபிகா பல்லிக்கல் மூலம் முறையே வெள்ளி மற்றும் வெண்கலம் கிடைத்தது.

மலேசியா ஆடவர் ஸ்குவாஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவ்ரவ் கோஷல் தலைமையில் இந்தியா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

சுமார் 2 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-0 என்று வெற்றி பெற்றது. முதலில் 25 வயது வீரர் ஹரிந்தர்பால் சிங் மலேசிய வீரர் இஸ்கந்தர் மொகமது அஸ்லான் பின் என்ற வீரரை 11-8, 11-6, 8-11, 11-4 என்ற செட்களில் வென்றார்.

சவ்ரவ் கோஷல் முதல் ஆட்டத்தில் 6-11 என்று பின் தங்கி பிறகு மீண்டெழுந்து 11-7, 11-6, 12-14, 11-9 என்று வெற்றி பெற்றதையடுத்து 2-0 என்று வென்று தங்கம் வென்று வரலாறு படைத்தது இந்திய அணி.

இந்திய மகளிர் அணி மலேசியாவிடம் 0-2 என்று இறுதிப் போட்டியில் தோல்வி தழுவி வெள்ளி வென்றது.

SCROLL FOR NEXT