விளையாட்டு

ஷான் டெய்ட்டின் சிறந்த ஐபிஎல் லெவன் அணிக்கு தோனி கேப்டன்: கெய்ல், டிவில்லியர்ஸ், பும்ரா இல்லை

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய முன்னாள் அதிவேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் ஐபிஎல் டீம் ஆஃப் த டோர்னமெண்ட்டை தேர்வு செய்துள்ளார், அதாவது ஐபிஎல் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார் இந்த அணிக்கு தோனியை அவர் கேப்டனாகத் தேர்வு செய்துள்ளார்.

ஏ.பி.டிவில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், ஜோஸ் பட்லர்  போன்ற அதிரடி வீரர்கள் இவர் அணியில் இல்லை அதே போல் பந்து வீச்சில் அற்புதமாக வீசி வரும் உலகின் சிறந்த பவுலர் பும்ரா இவரது அணியில் இல்லை. ஆனால் ஸ்பின்னராக ஹர்பஜன் சிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் 2019-ல் இதுவரை ஆரஞ்சு தொப்பி அணிந்து வரும் அதிகரன்களை பெற்றுள்ள டேவிட் வார்னர், டெய்ட்டின் ஐபிஎல் அணியில் தொடக்க வீரர் ஆவார், வார்னர் இதுவரை ஒரு சதத்துடன் 400 ரன்களை எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

இவருடன் தொடக்க வீரராகக் களமிறங்க 2019 ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் 304 ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்டோவைத் தேர்வு செய்துள்ளார் ஷான் டெய்ட். 

கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் அய்யர், விராட் கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  தோனி கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர், ஆந்த்ரே ரஸல், ரபாடா, சாஹல், ஷமி, ஹர்பஜன் ஆகியோர் பவுலிங்கில் உள்ளனர்.

ஐபிஎல் அதிக ரன்கள் பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் கிறிஸ் கெய்ல் இவர் அணியில் இடம்பெறவில்லை. 5ம் இடத்தில் உள்ள ஜோஸ் பட்லர் இடம்பெறவில்லை. ஆனால்  8ம் இடத்தில் உள்ள விராட் கோலி இடம்பெற்றுள்ளார்.

ஷான் டெய்ட்டின் சிறந்த ஐபிஎல் அணி வருமாறு:

வார்னர், பேர்ஸ்டோ, ராகுல், கோலி, அய்யர், தோனி (கெப்டன்), ரஸல், ரபாடா, சாஹல், ஷமி, ஹர்பஜன் சிங்

SCROLL FOR NEXT