விளையாட்டு

டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

செய்திப்பிரிவு

இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றியோடு முடிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்திய அணி ஷிகர் தவன், ரஹானே, கோலி, ரெய்னா, ராயுடு, கேப்டன் தோனி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பெயர் போன இந்திய படை இந்த போட்டியில் வாணவேடிக்கை காட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது.

பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.

இங்கிலாந்து அணி இயோன் மோர்கன் தலைமையில் களமிறங் குகிறது. அறிமுக வீரராக இடம்பெற்றிருக்கும் ஜேசன் ராய் களமிறக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அலெக்ஸ் ஹேல்ஸ், மோர்கன், ஜோஸ் பட்லர், ஜோ ரூட் உள்ளிட் டோர் இங்கிலாந்தின் பேட்டிங் கிற்கு பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்), ஷிகர் தவன், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, சஞ்ஜூ சாம்சன், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கரண் சர்மா, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, தவல் குல்கர்ணி, புவனேஸ்வர் குமார்.

போட்டி நேரம் : இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT