விளையாட்டு

ஐபிஎல் 2019: ரன் குவிப்பில் தொடர்ந்து முன்னணியில் தொடக்க ஆட்டக்காரர்கள்: சவாலாக தோனி, ரஸல்

ஐஏஎன்எஸ்

கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து ரன்குவிப்பில் தொடக்க ஆட்டக்கார்களே தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றனர்.

கொல்கத்தா அணிக்கு மறக்க முடியாத இன்னிங்ஸை அளித்த பிரன்டன் மெக்கலம் (73பந்துகளில் 158 ரன்கள்), மூன்றாவது முறையாக சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்த  வாட்ஸன்(117ரன்கள்)  இருவரும் தொடக்க ஆட்டக்காரர்கள்தான்.

கடந்த பல ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் மட்டுமல்லாமல், தற்போது நடந்துவரும் சீசனையும் ஆய்வு செய்தால், ரன்குவிப்பில் தொடக்க ஆட்டக்காரர்கள்தான் முன்னணியில் இருந்து வருகிறார்கள். அனைத்து அணிகளிலும் தொடக்க வீரர்களாக களமிறங்கும் வீரர்களே அதிகமான ரன்களை குவித்து வருகின்றனர்.

வார்னர், பேர்ஸ்டோ

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜானி பேர்ஸ்டோ(445), டேவிட் வார்னர்(611) ரன்கள் குவித்து முன்னணியில் இருக்கிறார்கள். இதில் வார்னர் ஆரஞ்சு தொப்பியுடன் முதலிடத்தில் இருக்கிறார். இருவரும் தங்களின் தாய்நாட்டு அணிக்கு திரும்பிவிட்டாலும், ரன்குவிப்பில் இரு தொடக்க ஆட்டக்காரர்கள் அணியின் ஸ்கோர் உயர்வுக்கும், பல வெற்றிகளுக்கும் முக்கியக் காரணமாக அமைந்தார்கள்.

கெயில் புயல்

gayljpg100 

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியில் அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் கெயில்(444), கே.எல்.ராகுல்(411) ரன்கள் குவித்துள்ளனர்ர். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியைக் காட்டிலும் இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாவே விளையாடி வருகிறது. அதிலும் கெயில் அணியின் எக்ஸ் ஃபேக்டராக இருந்து வருகிறார். களத்தில் நின்றுவிட்டால் ஸ்கோர் உயர்வதும், அல்லது அணி வெற்றுபெறுவதும் உறுதியாகிவிடும்.

கோலி, பர்தீவ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஆண்டு ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 400 ரன்களும், பர்தீப் படேல் 326 ரன்களும் சேர்த்துள்ளனர். ஆர்சிபி அணி கடந்த சில போட்டிகளாக தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவர இருவரின் ஆட்டமும் முக்கியக் காரணம்.

ஜோஸ் பட்லர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை ஜோஸ் பட்லர்(311) ரன்களை 8 போட்டிகளில் குவித்து சொந்த நாட்டுக்கு சென்றுவி்ட்டார். இவருக்கு அடுத்த இடத்தில் அஜின்கயே ரஹானே(391) ரன்களுடன் உள்ளார். இருவரும் ராயல்ஸ் அணிக்கு நன்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்து வருகின்றனர்.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண்(401), பிரித்வி ஷா(262) ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பவர்ப்ளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளும் இருவரும் நன்கு ஸ்கோர் செய்து நடுவரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு நெருக்கடியில்லாமல் செய்கின்றனர். இவர்கள் இருவரின் வலிமையான தொடக்கம் அது சேஸிங்காக இருந்தாலும், முதல் பேட்டிங்காக இருந்தாலும், சிறப்பாகச் செயல்படுகின்றனர். புள்ளிப்பட்டியலிலும் டெல்லி அணி 2-வது இடத்தில் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் குயின்டன் டீ காக்(393), ரோஹித் சர்மா(295), சிஎஸ்கே அணியின் டூப்பிளசி(179), வாட்ஸன்(251), கேகேஆர் அணியன் கிறிஸ் லின்(264), சுனில் நரேன்(143) ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் போது தங்களின் அதிரடி ஆட்டத்தால், அணிக்கும் ரன்களை பெற்றுக்கொடுத்து, தங்களின் ஸ்கோரையும் உயர்த்தி வருகின்றனர்.

தோனி, ரஸல்

தொடக்க ஆட்டக்காரர்கள் தவிர்த்து, நடுவரிசையில் கடும் போட்டியாளர்களாக இருப்பது கொல்கத்தா வீரர் ஆன்ட்ரூ ரஸல் (406), சிஎஸ்கே கேப்டன் தோனி(314) ஆகியோர் நல்ல ஸ்கோரில் இருந்து வருகின்றனர். பெரும்பாலான அணிகளில் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் தடுமாறி, ரன்களைச் சேர்க்க திணறும் நிலையில், இருவரின் தனிநபர்பங்களிப்பும் அணிக்கு கூடுதல் பலமாக இருந்து வருகிறது.

SCROLL FOR NEXT