விளையாட்டு

இங்கிலாந்து உலகக்கோப்பை அணி அறிவிப்பு: ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன் இல்லை

செய்திப்பிரிவு

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இயன் மோர்கன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லை, அதே போல் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் இல்லை.

ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 போட்டி, பாகிஸ்தானுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஆனால் கடைசியாக 2009-ல் ஒருநாள் போட்டியில் ஆடிய ஜோ டென்லி அதிசயமாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சாம் கரன் இல்லை ஆனால் அவர் சகோதரர் டாம் கரன் உள்ளார்.

இங்கிலாந்து அணி வருமாறு:

இயன் மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ், ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஜோ டென்லி, மொயின் அலி, ஆதில் ரஷீத், லியாம் பிளங்கெட், டாம் கரன், டேவிட் வில்லே, மார்க் உட்.

SCROLL FOR NEXT