ரோகித் சர்மா காயமடைந்து நாடு திரும்பியதை அடுத்து தொடக்க வீரர் இடத்திற்காக இந்திய அணியில் தான் மீண்டும் இடம்பெறப் பாடுபடுவேன் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த உத்தப்பா கூறியதாவது:
இன்னொரு தொடக்க வீரர் அணிக்குத் தேவை, நான் எனது சிறந்த ஆட்டங்கள் மூலம் அந்த இடத்திற்குத் தகுதியானவன் என நிரூபிப்பேன். மேலும் சில நல்ல இன்னிங்ஸ்களை உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடினால் நான் அந்த இடத்தை மீண்டும் பிடிப்பேன்.
நான் என்னை தொடக்க வீரராக மட்டுமே பார்க்கிறேன், தேவைப்பட்டால் விக்கெட் கீப்பிங் செய்வேன். ஆகவே எனக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதுகிறேன்.
ஐபில் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த்திருக்கிறேன். ஒருநாள் கிர்க்கெட்டைப் பொறுத்தவரை எனது தன்னம்பிக்கை நிச்சயம் உச்சத்தில் இருக்கிறது. ஆகவே 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பை நிச்சயம் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கூறினார் உத்தப்பா.