விளையாட்டு

லியாண்டர் பயஸ் ஜோடி பட்டம் வென்றது

பிடிஐ

மலேசிய ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், போலந்தின் மார்கின் மாட்கோவ்ஸ்கி ஜோடி பட்டம் வென்றது.

ஆண்டு இறுதி டென்னிஸ் போட்டியில் பங்கேற்று தரவரிசையில் முன்னிலை பெற வேண்டும் என்பதற்காக ஆசிய விளையாட்டு போட்டியை தவிர்த்து விட்டு லியாண்டர் இந்த போட்டியில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியா – போலந்து ஜோடி, தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஜேமி முர்ரே, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் ஜோடியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது. இதில் 3-6 என்று கணக்கில் முதல் செட்டை முர்ரே – பீர்ஸ் ஜோடி வென்றது. இதனால் இரண்டாவது செட்டில் பரபரப்பு அதிகரித்தது. கடுமையாக போராடிய லியாண்டர் – மார்கின் ஜோடி இந்த செட்டை 7-6 (5) என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கூடுதல் விறுவிறுப்பு ஏற்பட்டது. இறுதி 10-5 என்ற செட் கணக்கில் இறுதி செட்டை வென்ற லியாண்டர் – மார்கின் ஜோடி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

SCROLL FOR NEXT