பார்முலா ஒன் கார் பந்தய முன்னணி வீரரான ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். கடந்த டிசம்பரில் பிரான்ஸில் பனிச் சறுக்கு விளையாட்டில் இருந்தபோது பனிப்பாறையில் தலைமோதியதால் ஷூமாக்கர் கோமா நிலைக்குச் சென்றார்.
இதையடுத்து பிரான்ஸில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் உயிர் பிழைப்பதே கடினம் என்று கூறப்பட்டது. எனினும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவர் கோமாவில் இருந்து மீண்டார். ஸ்விட்சர்லாந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், இப்போது வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழுவதுமாக குணமடைய மேலும் பல நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.