விளையாட்டு

ஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று முதலில் பீல்டிங்

செய்திப்பிரிவு

சென்னை சேப்பாக்கத்தில் விழாக்கோல சூழலில் முதல் போட்டி தொடங்கவிருக்கிறது, இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். ஆர்சிபி அணி முதலில் பேட் செய்கிறது.

சென்னை சூப்பர் கிங்சில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஆடுகின்றனர். இம்ரான் தாஹிர், வாட்சன், பிராவோ. ஆர்சிபி அணியில் டிவில்லியர்ஸ், மொயின் அலி, கொலின் டி கிராண்ட் ஹோம், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகிய 4 அயல்நாட்டு வீரர்கள் ஆடுகின்றனர்.

ஏன் பீல்டிங் தோனி விளக்கம்:

சில பிராக்டீஸ் கேம்களை ஆடினோம், பிட்ச் கொஞ்சம் மந்தகதியாக உள்ளது, பிட்சைக் கணிக்க முடியவில்லை அதனால் முதலில் பேட் செய்தால் என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பதைத் தீர்மானிப்பது கடினம் என்றார்.’

விராட் கோலி, ‘பேட்டிங் பரவாயில்லை. கடந்த முறை சிஎஸ்கே 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றி பெற்றதைப் பார்த்தோம்’ என்றார்.

சிஎஸ்கே அணி:

ராயுடு, வாட்சன், ரெய்னா, தோனி, கேதார் ஜாதவ், ஜடேஜா, டிவைன் பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

ஆர்சிபி அணி:

கோலி, பார்த்திவ் படேல், மொயின் அலி, ஷிம்ரன் ஹெட்மையர், டிவில்லியர்ஸ், ஷிவம் துபே, கொலின் டி கிராண்ட் ஹோம், உமேஷ் யாதவ், சாஹல், மொகமது சிராஜ், நவ்தீப் சைனி.

SCROLL FOR NEXT