ஐபிஎல் முதல் நாள் போட்டியில் கிடைக்கும் டிக்கெட் வருவாய் முழுவதும் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்திய வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட உள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளன. முதல் ஆட்டத் தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட் டுள்ளனர். போட்டிக்கான டிக்கெட் விற்பனையும் முடிந்துவிட்டது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை ஊக்கப்படுத் துவதற்கான நிகழ்ச்சி சென்னை யில் நேற்று நடந்தது. இதில் அணி யின் கேப்டன் தோனி, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் என்.சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் என். சீனிவாசன் பேசும்போது, ‘‘வரும் 23-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடக் கும் முதல் போட்டியில் வசூலா கும் மொத்த டிக்கெட் தொகை யும் புல்வாமா தாக்குதலில் உயிரி ழந்த சிஆர்பிஎப் வீரர்கள் குடும்பத் துக்கு வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை, சிஎஸ்கே கேப்டன் தோனி கையால் வழங்கப்படும்’’ என்றார்.
புல்வாமா தாக்குதலில் பலி யான வீரர்களின் தியாகத்தை போற் றும் வகையில் ஐபிஎல் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரத்து செய்தது. இந்த விழாவுக்கான செலவுத் தொகை சுமார் ரூ.20 கோடி, சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.