பணிச்சுமை.. பணிச்சுமை என்றும் உலகக்கோப்பை உலகக்கோப்பை என்றும் வீரர்களை அச்சுறுத்தினாலும் ஐபிஎல் போட்டிகளில் போட்டிகளை எந்த வீரரும் துறக்கப்போவதில்லை என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் அவ்வாறு விளையாடாமல் இருப்பது தீர்வாகாது என்றார் கங்குலி.
“விளையாடாமல் இருப்பது தீர்வல்ல. ஆம் நிறைய கிரிகெட் போட்டிகள்தான் இல்லையெனக் கூறவில்லை, ஆனால் சும்மா விளையாடுங்கள்..சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை வீரர்களுக்கு 15-16 ஆண்டுகள் ஆட வாய்ப்பு கிடைக்கும்? களைப்படைந்து விடுவோம், மனச்சோர்வு ஏற்பட்டு விடும் என்று எந்த வீரரும் நினைக்கக் கூடாது என்றே நான் கூறுவேன். புத்துணர்வு பெற வழிமுறையைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.
நான் எப்போதும் கூறுவது போல், இந்த விளையாட்டில் கால அவகாசம் என்பது குறைவு. சர்வதேச அளவில் ஐபிஎல் அளவில் வாய்ப்புகள் கிடைக்கும் போது விளையாடி விட வேண்டும். நான் சொன்னது போல் விளையாடாமல் இருப்பது தீர்வாகாது.
எங்கள் தலைமுறை வீரர்களும் நிறைய போட்டிகளில் ஆடினர். ஆனால் ஐபிஎல் இல்லை, எங்கள் கரியர் முடிவில் ஐபிஎல் வந்தது. ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான்”
என்றார் கங்குலி.