விளையாட்டு

ஆசிய விளையாட்டு: காஷ்யப் நம்பிக்கை

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக தீவிரப் பயிற்சியை நிறைவு செய்துள்ளேன். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்றார் இந்திய பாட்மிண்டன் வீரர் காஷ்யப்.

காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காஷ்யப், பின்னர் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவுள்ள அவர் மேலும் கூறியது:

கடந்த சில தினங்களாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். அதனால் இப்போது உச்சகட்ட பார்முக்கு வந்திருக்கிறேன். தற்போதுள்ள நிலையை ஆசிய விளையாட்டுப் போட்டியின்போது பராமரிக்க வேண்டும். தற்போது மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன். நாட்டுக்காகவும், எனக்காகவும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்ல விரும்புகிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டி அளவுக்கு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு பயிற்சி மேற்கொள்ளவில்லை. எனது உடற்தகுதியும் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருந்தது. ஆனால் தற்போதைய பயிற்சிக்குப் பிறகு முழு உடற்தகுதி பெற்றிருப்பதை உணர்கிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT