விளையாட்டு

ஹாக்கியில் இந்தியா வெற்றி

செய்திப்பிரிவு

அஸ்லான் ஷா கோப்பைக்கான ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது.

மலேசியாவின் இபோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை எதிர்த்து விளையாடியது. 24-வது நிமிடத்தில் வருண் குமார் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து 55-வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங், பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் 2-0 என்ற முன்னிலையை அடைந்தது. கடைசி வரை போராடியும் ஜப்பான் அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT