அனைவரது கவனமும் தனியார் பணமுதலை ஐபிஎல் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ள நிலையில், அதற்குப் பிறகு உலகக்கோப்பை என்ற ஒன்று இருப்பதை அனைவருமே மறந்து விட்டனர் போல் தெரிகிறது, ஆனால் கிளென் மெக்ரா நமக்கு உலகக்கோப்பை கிரிக்கெட்டை தன் கூற்றின் மூலம் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது கிளென் மெக்ரா கூறியதாவது:
டாப் 2 அணிகள் என்றால் நிச்சயம் இந்தியாவும் இங்கிலாந்தும்தான். ஆனால் இங்கிலாந்து மே.இ.தீவுகளுக்கு எதிராக கஷ்ட காலங்களை சந்தித்தது, இந்தியாவோ ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரில் உள்நாட்டில் தோற்றுள்ளது. ஆகவே உலகக்கோப்பையில் போட்டி கடுமையாக இருக்கும்.
இந்தியாவுக்கு எதிராக டி20, ஒருநாள் தொடர்களில் ஆஸ்திரேலியா வென்றிருப்பதால் உலககோப்பையில் ஆஸ்திரேலியாவின் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதாவது இந்த வெற்றிகள் ஆஸ்திரேலியாவின் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.
மேலும் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் அணிக்கு வந்து விடுவார்கள் ஆகவே ஆஸ்திரேலியா மேலும் வலுவடையும்.
இவ்வாறு கூறினார் கிளென் மெக்ரா.
இங்கிலாந்தும் இந்தியாவும் உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தங்கள் முதல் போட்டியில் ஆடுகின்றன.