தமிழக டென்னிஸ் சங்க துணைத் தலைவர் பதவியில் இருந்து கார்த்தி சிதம்பரம் நீக்கப்பட்டுள்ளார்.
டென்பின் பவுலிங் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவராகவும் கார்த்தி சிதம்பரம் பொறுப்பு வகித்து வந்தார். ஒரே நேரத்தில் இரு பதவிகளில் இருந்ததால் அவரை இந்திய டென்னிஸ் சங்கம் நீக்கியுள்ளது.
பெங்களூரில் சனிக்கிழமை இந்திய டென்னிஸ் சங்க ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கார்த்தி சிதம்பரத்தை நீக்க முடிவெடுக்கப்பட்டது.. நிர்வாகக்குழுவின் 12 உறுப்பினர்களை தேர்வு செய்யவும் தேர்தல் நடந்தது. தமிழக நிர்வாகி சிபிஎன் ரெட்டி நீக்கப்பட்டு, புதிய உறுப்பினராக பஞ்சாபை சேர்ந்த தினேஷ் அரோரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தன்னை டென்னிஸ் சங்க பொறுப்பில் இருந்து நீக்கியது விதிகளுக்கு முரணானது என்று குற்றம்சாட்டியுள்ள கார்த்தி சிதம்பரம் இதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியுள்ளார்