எவெலிங்டன் எம்.ஆர்.சி. விளையாட்டு அதிகாரி லெப்டினென்ட் கர்னல் ஆனந்த், விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் அனந்தகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:
வெலிங்டன் எம்.ஆர்.சி. சார்பில், எம்.ஆர்.சி. கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வெலிங்டன் எம்.ஆர்.சி. ஹாக்கி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி 1972-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது தான் நடத்தப்பட உள்ளது.
இதில், சென்னையைச் சேர்ந்த இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி (சாய்), தமிழ்நாடு காவல் துறை அணி உள்பட 12 அணிகள் பங்கேற்கவுள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எம்.ஆர்.சி. சுழற்கோப்பையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படவுள்ளது. இரண்டாவது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாவது இடம் பெறும் அணிக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.