விளையாட்டு

களமிறங்குகிறார் வார்னர்: கொல்கத்தா அணி டாஸ் வென்றது; இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் இல்லை

பிடிஐ

12-வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தாவில் இன்று நடக்கும் 2-வது ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய ஆயத்தமாகியுள்ளது.

ஐபிஎல் 12-வது சீசனின் 2-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து புவனேஷ் குமார் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது.  கான் வில்லியம்ஸன் இல்லாததால், அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்றுள்ளார். கேப்டன் பொறுப்பில் முதல் முறையாக புவனேஷ்குமார் விளையாடுகிறார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் காயத்தால் அவதிப்படுவதால், கேப்டன் பொறுப்பை புவனேஷ்வர் குமார் ஏற்றுள்ளார். இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கொல்கத்தா அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் நாகர்கோட்டி, ஷிவம் மவி, தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் நார்ட்ஜே ஆகியோர் இல்லாத சூழலில் களமிறங்குகிறது.

அதேபோல, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வழக்கமான கேப்டன் கேன் வில்லியம்ஸன் இல்லை, விருதிமான் சஹாவை எடுத்தபோதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த சீசனில் விளையாடமல் இருந்த ஆஸி. வீரர் டேவிட் வார்னர் இந்த முறை களமிறங்குகிறார். உலகக்கோப்பை நெருங்கும் வேளையில் வார்னர் மீது அனைவரின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விவரம்:

புவனேஷ்வர் குமார்(கேப்டன்), டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஷகிப் அல் ஹசன், விஜய் சங்கர், யூசுப் பதான், ரஷித் கான், சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல்

கே.கே.ஆர் அணி விவரம்:

தினேஷ் கார்த்திக்(கேப்டன்), கிறிஸ்லின், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நிதின் ராணா, ஆன்ட்ரூ ரஸல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குஷன், பிரசித் கிருஷ்ணா

SCROLL FOR NEXT