12-வது ஐபிஎல் போட்டியில் 8 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், அதிக ரன்கள், விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பி, ஊதா தொப்பி ஆகியவற்றைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.
12-வது ஐபிஎல் போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்று விளையாடிவரும் தொடரில் இதுவரை 8 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன.
இதில் தோனியைக் கேப்டனாகக் கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரேடர்ஸ் அணி மட்டும் இரு போட்டிகளிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளன.
டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளன. கோலி தலைமையிலான ஆர்சிபி, ரஹானேயின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளன.
அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளி |
| கே.கே.ஆர் | 2 | 2 | 0 | 4(+0.834) |
| சிஎஸ்கே | 2 | 2 | 0 | 4 (+0.495) |
| டெல்லி | 2 | 1 | 1 | 2(+0.782) |
| சன்ரைசர்ஸ் | 2 | 1 | 1 | 2 +0.190 |
| பஞ்சாப் | 2 | 1 | 1 | 2 -0.350 |
| எம்.ஐ | 2 | 1 | 1 | -0.775 |
| ஆர்சிபி | 2 | 0 | 2 | -0.575 |
| ஆர்.ஆர் | 2 | 0 | 2 | -0.672 |
கடந்த 8 போட்டிகளில் இதுவரை அணிகள் தலா 2 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தாலும், அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களைக் குவித்து முன்னிலை பெற்று வருகின்றனர், ஆரஞ்சு தொப்பியைப் பெறுவதற்கு கடும் போட்டியும் இருந்து வருகிறது.
அந்த வகையில் அதிகமான ரன்களை குவித்த பேட்ஸ்மேன் வரிசையில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் வீரர் டேவிட் வார்னர் முதலிடத்திலும், நேற்று நடந்த ஆட்டத்தில் சீசனில் முதல் சதம் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சஞ்சு சாம்ஸன் 2-வது இடத்திலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர் நிதிஷ் ராணா 3-வது இடத்திலும் உள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் வீரர் ரிஷப் பந்த் 4-வது இடத்திலும், கே.கே.ஆர் வீரர் உத்தப்பா 5-வது இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் சிஎஸ்கே வீரர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கிங்ஸ்லெவன் அணிக்கும், மும்பை அணிக்கும் முதல் ஆட்டமும், கொல்கத்தாவுக்கும், டெல்லி அணிக்கு இரவிலும் போட்டி நடக்கிறது. இன்றைய ஆட்டங்கள் முடிவில் ஆரஞ்சு தொப்பி மாறக்கூடும்.
வீரர்கள் | போட்டி | ரன்கள் | அதிகபட்சம் |
| வார்னர் | 2 | 154 | 85 |
| சாம்ஸன் | 2 | 132 | 102* |
| நிதிஷ் ராணா | 2 | 131 | 68 |
| ரிஷப் பந்த் | 2 | 103 | 78* |
| உத்தப்பா | 2 | 102 | 67 |
| கெயில் | 2 | 99 | 79 |
| ரஸல் | 2 | 97 | 49* |
| ரஹானே | 2 | 97 | 70 |
| தவண் | 2 | 94 | 51 |
| பேர்ஸ்டோ | 2 | 84 | 45 |
அதிக விக்கெட்டுகள் எடுத்த வரிசையில் ஆர்சிபி அணி வீரர் சாஹல் முதலிடத்தில் இருந்து ஊதா தொப்பியை வைத்துள்ளார். 2-வது இடத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர், 3-வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா, 4-வது இடத்தில் சிஎஸ்கே வீரர் டிவைன் பிராவோவும், கொல்கத்தா வீரர் ரஸலும் உள்ளனர்.
வீரர்கள் | போட்டி | விக்கெட்டுகள் |
| சாஹல் | 2 | 5 |
| தாஹிர் | 2 | 4 |
| பும்ரா | 2 | 4 |
| பிராவோ | 2 | 4 |
| ரஸல் | 2 | 4 |
| ஜடேஜா | 2 | 3 |
| ஹர்பஜன் | 2 | 3 |
| ரபாடா | 2 | 3 |
| கோபால் | 2 | 3 |
| சிராஜ் | 2 | 3 |