ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-வது ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா.
ஹராரேவில் செவ்வாய்க் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 51 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 86, பில் ஹியூஸ் 85 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் டூ பிளெஸ்ஸி சதமடித்தபோதும் எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன் களில் நடையைக் கட்டியதால் 44 ஓவர்களில் 220 ரன் களுக்கு சுருண்டது. 109 பந்து களைச் சந்தித்த டூ பிளெஸ்ஸி 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்தார்