விளையாட்டு

அரசு வேண்டாம் என்று முடிவெடுத்தால் உலகக்கோப்பைப் போட்டித் தொடரையே துறக்கத் தயார்: ரவிசாஸ்திரி

செய்திப்பிரிவு

புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று கடும் கோரிக்கைகள் எழும்பி வருகின்றன.

கங்குலி, ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் புறக்கணிப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க கவாஸ்கர் போன்றோர் நிதானப்போக்கைக் கடைபிடிக்க வலியுறுத்தினர்.

மேலும், தற்போது பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்றம் பிசிசிஐக்காக நியமித்த நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் சிறப்பு பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டி விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் மிரர் நவ் பத்திரிகைக்கு ரவிசாஸ்திரி அளித்த பேட்டி:

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை பிசிசிஐ மற்றும் அரசு எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவோம். என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தான் தெரியும் அவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்.

மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம் ஆகவே உலகக்கோப்பைப் போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டாம் என்று அரசு முடிவெடுத்தால் அரசின் முடிவுக்குக் கட்டுப்படுவோம்.

இவ்வாறு கூறினார் ரவிசாஸ்திரி

SCROLL FOR NEXT