விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி.அணியில் இருந்து கப்தில் நீக்கம்

பிடிஐ

இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டித்தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வீரர் மார்டின் கப்தில் நீக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கப்திலுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால்,அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டுளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஜிம்மி நீஷம் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் நிருபர்களிடம் கூறுகையில், " இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் மார்டின் கப்தில் விளையாட முடியாத சூழலில் இருக்கிறார். அவருக்கு முதுகுபகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் முழுமையாக குணமடையவில்லை. ஆதலால், அவர் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அடுத்தவாரம் வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்குள் கப்தில் உடல்நலம் தேறிவிடுவார் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

டி20 தொடர் வரும் 6-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. 8-ம் தேதி ஆக்லாந்தில் 2-வது போட்டியும், 10-ம் தேதி ஹேமில்டனில் 3-வது போட்டியும் நடக்கிறது.

நியூசிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), டாக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஷன், ஸ்காட் குக்ஜெலிஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, ஜிம்மி நீஷம், மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபெர்ட், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர்

SCROLL FOR NEXT