விளையாட்டு

பிரியாணிக்காக ஓட்டலை மாற்றினார் கேப்டன் தோனி

என்.மகேஷ் குமார்

சக கிரிக்கெட் வீரர் வீட்டில் இருந்து கொண்டு வந்த பிரியாணியை, ஓட்டலில் வைத்து உண்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காததால், அணியினருடன் வேறு ஓட்டலுக்கு மாறினார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த செவ்வாய்க்கிழமை கேப்டன் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் லீக் டி-20 போட்டிக்காக ஹைதராபாத் சென்றது. அங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நட்சத்திர ஓட்டலில் தங்கிய தோனி குழுவினருக்கு, கிரிக்கெட் வீரர் அம்பட்டி ராயுடு தனது வீட்டிலிருந்து ஹைதராபாத் பிரியாணியை தயார் செய்து ஓட்டலுக்குக் கொண்டு வந்தார்.

ஆனால் வெளியில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை அனுமதிக்க மாட்டோம் என முதலில் ஓட்டல் நிர்வாகம் தெரிவித்தது. பின்னர் வீரர்களின் அறைகளில் மட்டும் பிரியாணியை அனுமதிப்பதாக தெரிவித்தது. இதனால் கேப்டன் தோனிக்கு கோபம் வந்தது. உடனடியாக தனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் ஹோட்டலைக் காலி செய்து, வேறு ஒரு ஓட்டலுக்குச் சென்று விட்டார் தோனி. இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகிகளும், தோனிக்கு ஆதரவாக வேறு ஹோட்டலுக்கு சென்று விட்டனர்.

SCROLL FOR NEXT