இங்கிலாந்து கவுன்டி போட்டியில் டுர்காம் கிரிக்கெட் கிளப்புக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன்.
டுர்காம் அணிக்காக விளையாடி வந்த ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஜான் ஹேஸ்டிங்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளதால் அவருக்குப் பதிலாக ஆரோன் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை எம்.ஆர்.எப். பவுண்டேசனில் கிளன் மெக்ராத்திடம் பயிற்சி பெற்று வரும் வருண் ஆரோன், அடுத்த வாரம் லண்டன் செல்லவிருக்கிறார். நார்த்தாம்ப்டன்ஷையர் அணிக் கெதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்கவுள்ளார்.