71 ஆண்டுகால ஆஸ்திரேலிய தொடர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக இந்திய அணி அங்கு 2-1 என்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதையடுத்து பிசிசிஐ இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, பரிசுத்தொகைகளை அனைவருக்கும் அறிவித்துள்ளது.
இந்திய வரலாறு மட்டுமல்ல, ஆசியாவிலேயெ ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முதலாக தொடரை வென்றது இந்திய அணியே. இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவிப்பணியாளர்கள் ஆகியோருக்கான ஊக்கப்பரிசு தொகையினை அறிவித்துள்ளது.
அதன்படி,
1. அனைத்து டெஸ்ட் அணி வீரர்கள் தங்கள் ஓர் ஆட்டத்துக்கான தொகையை பரிசாக பெறுகிறார்கள், விளையாடிய 11 வீரர்களுக்கு ஆட்டம் ஒன்றுக்கு ரூ.15 லட்சமும், ரிசர்வ் வீரர்களுக்கு ரூ.7.5 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பயிற்சியாளர்கள் ஓவ்வொருவருக்கும் ரூ.25 லட்சம்.
3. டீம் இந்தியா உதவிப்பணியாளர்கள் (பயிற்சியாளர் அல்லாத) அவர்களது சம்பளத் தொகையினை ஊக்கப்பரிசுத் தொகையாகப் பெறுவார்கள்.
இவ்வாறு பிசிசிஐ அறிவித்துள்ளது.