விளையாட்டு

ரயில்வே தடகளம்: இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

தெற்கு ரயில்வே விளையாட்டு சங்கத்தின் (எஸ்ஆர்எஸ்ஏ) சார்பில் 80-வது அகில இந்திய ரயில்வே தடகளப் போட்டி சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இந்தப் போட்டியின் தொடக்க விழா இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் எஸ்.விஜயகுமரன் போட்டியைத் தொடங்கி வைக்கிறார். செப்டம்பர் 3-ம் தேதி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு களை வழங்குகிறார்.

SCROLL FOR NEXT