ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நேற்று நடைபெற்ற கால் இறுதியில் செக். குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் செரீனாவைச் சாய்த்தார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் ஒசாகா 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் சுவிட்டோலினாவை வென்றார்.
ஆடவர் கால் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நிஷிகோரியும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர். ஆட்டத்தின் இடையே காயம் காரணமாக நிஷிகோரி விலகியதால் ஜோகோவிச் அரை இறுதிக்கு முன்னேறினார்.