ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் டென்னிஸ் போட்டியின் இறு திச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங் கனை பெட்ரோ கிவிட்டோவா, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ் திரேலிய ஓபன் டென்னிஸ் ஆஸ் திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆட வர் ஒற்றையர் முதல் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், சுவிட் சர்லாந்தின் பெடரரை தோற்கடித்த இளம் வீரரான கிரீஸ் நாட்டின் சிட்ஸிபஸை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் நடால் அதி ரடியாக விளையாடினார். அவரது அபாரமான சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல் சிட்ஸிபஸ் திணறினார். இறுதியில் நடால் 6-2, 6-4, 6-0 என்ற நேர் செட்களில் சிட்ஸிபஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன் னேறியுள்ளார். இந்த ஆட்டத்தில் நடால் ஒரு கேமை கூட இழக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடைபெற்ற மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் செக். குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா , அமெரிக்காவின் டேனிலி ரோஸ் கோலின்ஸ் ஆகியோர் மோதினர்.
இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறை யாக ஆஸ்திரேலிய ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி யுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகா 6-2, 4-6, 6-4 என்ற நேர் செட் களில் செக். குடியர சின் கரோலினா பிளிஸ் கோவாவை வீழ்த்தினார்.