விளையாட்டு

நியூஸி. ஒருநாள், டி20 தொடர்: அணித்தேர்வில் பிசிசிஐ-யின் முக்கிய அறிவிப்பு

செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் 3 டி320 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இன்று நேப்பியரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது இந்திய அணி.

இந்நிலையில் இந்திய அணித்தேர்வுக்குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதாவது கேப்டன் விராட் கோலியின் பணிச்சுமையை குறைப்பதற்காக நியூஸிலாந்துக்கு எதிராக கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் அதனைத் தொடர்ந்த டி20 தொடர் ஆகியவற்றுக்கு விராட் கோலிக்கு ஓய்வு அறிவித்துள்ளது.

கோலிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. கோலிக்குப் பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருப்பார்.

நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு பிப்ரவரி 24 முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் உள்ளது, அடுத்து ஐபிஎல், அதன் பிறகு உலகக்கோப்பை என்று கிரிக்கெட் உலகம் சுறுசுறுப்படைய உள்ளது.

இதனால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு விராட் கோலிக்கு நியூஸி. தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸி அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு விராட் திரும்புவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT