விளையாட்டு

ஆசிய விளையாட்டு டென்னிஸ்: இந்திய அணிக்கு வெள்ளி

செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டு ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ்ஸில் இந்திய வீரர்கள் சனம் சிங், சாகெத் மைனெனி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகின்றன.

திங்கள்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர்கள் தோற்றனர். ஆனால் அது இறுதிப் போட்டி என்பதால் அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT