விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன்:  இறுதி சுற்றில் ஜோகோவிச்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மெல்பர்னில் நடைபெற்று வரும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 28-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலியை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 23 நிமிடங்களில் முடிவடைந்தது.

இறுதி சுற்றில் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் நாளை மோதுகிறார். இருவரும் கிராண்ட் ஸ்லாம் இறுதி போட்டிகளில் இதற்கு முன்னர் 7 முறை மோதி உள்ளனர். இதில் நடால் 4 முறையும், ஜோகோவிச் 3 முறையும் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

மகளிர் பிரிவு

இதற்கிடையே மகளிர் ஒற்றை யர் பிரிவில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் 4-ம் நிலை வீராங் கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் பெட்ரா விட்டோவாவுடன் மோதுகிறார்.

SCROLL FOR NEXT